விபத்தில் உயிரிழந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


விபத்தில் உயிரிழந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 March 2022 7:47 PM IST (Updated: 14 March 2022 7:47 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் உயிரிழந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி அருகே மாதவரம் முஸ்லிம் நகரில் வசித்து வந்தவர் ஆபித் (வயது 20). இவரது நண்பர் முனீர் (21). இவர்கள் இருவரும் ஜனப்பன் சந்திரன் கூட்டு சாலையில் உள்ள கறி கடையில் வேலை செய்து விட்டு, 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பொன்னேரி நெடுஞ்சாலையில் மாதவரம் அருகே வந்தபோது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஆபித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். முனீர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் பலியான ஆபித்தின் உடலை பொன்னேரி போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விபத்து குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, உறவினர்கள் நேற்று மாதவரம் முஸ்லிம் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story