வாள், பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது
திண்டுக்கல் அருகே வாள், பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் இ.பி.காலனி பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது கையில் பையுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் பிடிபட்டவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் வாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் அவர்களை தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தாடிக்கொம்பு அருகே உள்ள மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த லாரன்ஸ் பிரவீன் (வயது 25), பிறகரையை சேர்ந்த கிறிஸ்டோபர் (22), மறவபட்டிபுதூரை சேர்ந்த தீபக் சலேத்ராஜ் (18), உண்டார்பட்டியை சேர்ந்த லாரன்ஸ் பிரபு (23) என்பது தெரியவந்தது.
மேலும் திண்டுக்கல் புறநகர் பகுதியில் ஆண்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் ெதரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய மாரம்பாடியை சேர்ந்த பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story