அய்யனார் கோவிலில் வருடாபிஷேகம்
சாணார்பட்டி அருகே கோணப்பட்டியில் உள்ள அய்யனார் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது
கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே கோணப்பட்டியில் உள்ள ஸ்ரீஅய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் காப்பு காட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் வாஸ்து, முதல் கால பூஜை, திருவிளக்குபூஜை, எந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு வருடாபிஷேக அலங்கார பூஜைகள், தீர்த்தாபிஷேகம், அருட்பிரசாதம் வழங்குதல் ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
பூஜைகளை மேட்டுக்கடை ஆதிபரஞ்சோதி சகலோக சபை மடாதிபதி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார் விழாவிற்கான ஏற்பாடுகளை கோணப்பட்டி ஊர்பொதுமக்கள், விழா நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். இந்த வருடாபிஷேகத்தில் கோணப்பட்டி, சிறுமலை, சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story