மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
சாத்தான்குளம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட மீன்வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட மீன்வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மீன் வியாபாரி
நெல்லை மாவட்டம் திசையன்விளை மன்னராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் து. முத்துசாமி (வயது 75). மீன் வியாபாரி. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். இதனால் முத்துச்சாமி அவரது மகனுடன் வசித்து வந்தார். தினமும் மீன் வியாபாரத்துக்கும் சென்று வந்த அவர் மனைவி இறந்த போன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். உறவினர்கள் ஆறுதல் கூறியபோதும், மனைவியை மறக்க முடியாமல் புலம்பி வந்துள்ளார்.
விஷம் குடித்து சாவு
இதனால் மீன் விற்பனைக்கும் அடிக்கடி செல்லாமல் இருந்ததால், வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சைக்கிளில் மீன் வியாபாரத்துக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. அவரை மகன் மற்றும் உறவினர்கள் தேடினர். இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள கொழந்தட்டு விலக்கில் மது பானத்தில் விஷம் கலந்து குடித்து முத்துச்சாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் சின்னத்துரை கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story