தூத்துக்குடி: 4 பேருடன் செஸ் விளையாடிக் கொண்டே கியூப் போட்டியில் சாதனை புரிந்த மாணவர்கள்
தூத்துக்குடியில், 4பேருடன் செஸ் விளையாடிக் கொண்டே கியூப் போட்டியில் மாணவர்கள் சாதனை புரிந்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மறவன்மடத்தைச் சேர்ந்த மாணவர் விக்டர் நோவா, புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த கோமதி மகள் மேகலா, தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபோது, கியூப் விளையாட்டை கற்று கொண்டனர்.
ஏற்கனவே, செஸ் விளையாடுவதில் ஆர்வமிக்க இவர்கள் உலக சாதனை முயற்சியாக, ஒரே நேரத்தில் 4 வீரர்களுடன் செஸ் விளையாடிக் கொண்டே கூம்பு வடிவிலான 8 கியூப்களையும் ஒரே வண்ணத்தில் சேர்க்க திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று மாணவர் விக்டர் நோவா, மாணவி கோமதி ஆகிய 2 பேரும் உலக சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில் 4 வீரர்களுடன் செஸ் போட்டியில் பங்கேற்றவாறே, 18 நிமிடங்களில் 8 கியூப்களையும் ஒரே வண்ணத்தில் சேர்த்தனர்.
இதையடுத்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர், மாணவியை அனைவரும் பாராட்டினர்.
--
Related Tags :
Next Story