பந்தலூர் அருகே சக்தி விநாயகர் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்


பந்தலூர் அருகே சக்தி விநாயகர் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 14 March 2022 10:02 PM IST (Updated: 14 March 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே சக்தி விநாயகர் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பாதிரிமூலாவில் சக்திவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. 

இதற்காக பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. பிறகு கோட்டப்பாடி ஈஸ்வரன் கோவிலில் இருந்து புனிதநீர் தீர்த்தம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டது. 

அங்கிருந்து மூலக்கடை வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டப பூஜையும் தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.


Next Story