பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாலாவில் விவசாயிகள் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாலாவில் விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 March 2022 10:17 PM IST (Updated: 14 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாலாவில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கூடலூர்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சட்டப்பிரிவு- 17 நிலத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். 

தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து 5 ஏக்கர் வரை நிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாலாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வர்கீஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 மாவட்ட தலைவர் வாசு, நிர்வாகிகள் ரமேஷ், விஜயா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பேசினர்.  இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் நீண்ட காலமாக சட்டப்பிரிவு 17 நிலப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இதுதவிர வன விலங்குகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தால் நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியாமல் உள்ளது. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 9 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story