வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி
வேளாங்கண்ணி அருகே வயலில் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே வயலில் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஆலமழை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் லெனின்(வயது42). விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை தனது வயலில் சாகுபடி செய்துள்ள நெல்லை அறுவடை செய்ய அறுவடை எந்திரத்தை அழைத்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
வயலில் பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் நேற்று காலை லெனின் வயல் பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் காலில் காயத்துடனும், மூக்கில் ரத்தம் வந்த நிலையிலும் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லெனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லெனின் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறுவடை எந்திரம் அழைத்து செல்ல சென்ற விவசாயி, வயலில் மர்மமாக பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த லெனினுக்கு வேம்பு என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story