புதுப்பேட்டை அருகே பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை


புதுப்பேட்டை அருகே பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2022 10:25 PM IST (Updated: 14 March 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே பிளேடால் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை


புதுப்பேட்டை

புதுப்பேட்டை அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மனைவி சுகந்தி(வயது 37). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த சுகந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் கடந்த 12-ந் தேதி திடீரென்று இதயத்தில் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனி உடனடியாக சுகந்தியை சிகிச்சைக்காக விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story