நாகூரில், நுங்கு விற்பனை அமோகம்


நாகூரில், நுங்கு விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 14 March 2022 10:29 PM IST (Updated: 14 March 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

நாகூரில் சுட்டெரிக்கும் வெயிலால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

நாகூர்:
நாகூரில் சுட்டெரிக்கும் வெயிலால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில்
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தினமும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் தர்காவிற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகலில் வெளியே  வராமல் வீடுகளிலே பொதுமக்கள் முடங்கி கிடக்கின்றனர். வெயில் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
நுங்கு விற்பனை 
வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள், உடலுக்கு குளிர்ச்சியை தரும்  பனை நுங்கை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் நாகூரில் நுங்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாகூரில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு ஒரு நுங்கு விலை ரூ.4-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது 8 நுங்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் நுங்கை வாங்கி செல்கின்றனர் என்றார்.

Next Story