பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்


பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 14 March 2022 10:31 PM IST (Updated: 14 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதால் பள்ளி நேரங்களில் தகட்டூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

வாய்மேடு:
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதால் பள்ளி நேரங்களில் தகட்டூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். 
அரசு மேல்நிலைப்பள்ளி
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தகட்டூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு துளசியாபட்டினம், அண்ணாப்பேட்டை, மருதூர், ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம், திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு, இடும்பாவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.  
இங்கு படித்து வரும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்களில் பள்ளிக்கு வருவது வழக்கம். இந்த பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி இடையே இயக்கப்படும் பஸ்களிலும், வேதாரண்யம்- முத்துப்பேட்டை இடையே இயக்கப்படும் பஸ்களிலும் தகட்டூரில் உள்ள பள்ளிக்கு வருகின்றனர். 
கூடுதல் பஸ்கள்
இந்த நிலையில் தகட்டூருக்கு பள்ளி நேரத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.. இதன் காரணமாக கிராம பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் தினசரி பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 
எனவே காலையிலும், மாலையிலும் பள்ளி நேரத்தில் தகட்டூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story