தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 March 2022 10:32 PM IST (Updated: 14 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்

திண்டுக்கல்:
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் 
கோபால்பட்டியில், சாலையோரத்தில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், கோபால்பட்டி.
குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா?
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள பர்மா காலனி, அண்ணா காலனியில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் இப்பகுதியில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படும் நிலை உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் குப்பைகள் தொட்டிகள் வைக்க வேண்டும். 
அபிநயா, திண்டுக்கல். 
ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்
திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் சிகிச்சைக்காக பக்கத்து ஊரில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வக்கம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
சாணார்பட்டி 8-வது வார்டு கிழக்கு தெருவில் கடந்த பல மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நீண்ட தூரம் நடந்து சென்று பக்கத்து ஊரில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, சாணார்பட்டி.
ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
பழனி குளத்து ரவுண்டானாவில் இருந்து பெரியகடைவீதி செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், பழனி.

Next Story