பின்னத்தூர் சிவன் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது பக்தர்கள் தரிசனம்

பின்னத்தூர் சிவன் கோவிலில்  மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 14 March 2022 10:35 PM IST (Updated: 14 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

பின்னத்தூர் சிவன் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது பக்தர்கள் தரிசனம்

அண்ணாமலைநகர்

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் பாம்பன் சுவாமிகள் வழிபட்ட பர்வதவர்த்தினி சமேத ராமநாதஈஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் நேற்று மாலை மூலவரான பர்வதவர்த்தினி சமேத ராமநாதஈஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மேலும் மூலவர் மீது சூரிய ஒளி விழும் இந்த நிகழ்வு 3 தினங்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது.

Next Story