அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண் கைது
x
தினத்தந்தி 14 March 2022 10:38 PM IST (Updated: 14 March 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிக்கல்:
நாகையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகம்   பெருங்கடம்பனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது;-
சங்கமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் ராஜன் மகள் தீபா(27). இவர் நாகை ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அந்த அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டர் பணி வாங்கி தருவதாகவும் என்னிடம்  கூறினார்.
வேலை வாங்கி தரவில்லை
இதை நம்பி நான் எனது அண்ணன்  மகன் சபரிராஜுக்கு வேலை வாங்கி தரக்கோரி ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை தீபாவிடம் வழங்கினேன் ஆனால் அவர் கூறிய படி எனது அண்ணன் மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை என தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கடலூர் மாவட்டம் வடலூரில் தங்கியிருந்த தீபாவை கைது செய்து நாகைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் தீபா நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்க்கவில்லை என்பதும்,  அவர் ராமச்சந்திரனை போல் மேலும் 7 பேரிடம்  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  ரூ.15 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.  மேலும் இவரிடம் பணம் கொடுத்து வேறு யாராவது ஏமாந்து உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story