ஆட்டுத்தொழுவமாக மாறிய அங்கன்வாடி மைய கட்டிடம்
கல்வராயன்மலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் ஆட்டுத்தொழுவமாக மாறி உள்ளது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியம் குண்டியநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட வைலம்பாடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் அடிப்படை கல்வி கற்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் அந்த கட்டிடம் பாதி அளவு கட்டப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தப்பட்டு கிடப்பில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் அடிப்படை கல்வி கற்காமல் நேரடியாக தொடக்கப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அந்த தொடக்கப்பள்ளிக்கும் ஆசிாியர் சரியாக வராததால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் நிலை உள்ளது.
கோரிக்கை
இந்த நிலையில் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள அங்கன்வாடி மையம் தற்போது ஆட்டுத்தொழுவமாக மாறி உள்ளது. அதாவது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கட்டிடத்தில் தங்களுடைய ஆடுகளை கட்டிைவத்து பாதுகாத்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வைலம்பாடி கிராமத்தில் முடிவடையாமல் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story