5 குளங்களை தூர் வாரும் பணி தீவிரம்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 5 குளங்களை தூர்வாருதல், கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லிக்குப்பம்,
நகராட்சி துறை சார்பில் செங்கல்பட்டு மண்டலத்தில் 18 நகராட்சிகளில், பின்தங்கிய நகராட்சியாக உள்ள நெல்லிக்குப்பம் நகராட்சியில் கிராமப்புறங்களைப்போல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக நகராட்சியில் 5 குளங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 102 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட குளங்களை தூர்வாருதல், கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் காமராஜ் நகர் அய்யனார் கோவில் குளம் சீரமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட அவர் தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் செங்கல்பட்டு மண்டலத்தில் முதல் முறையாக நெல்லிக்குப்பம் நகராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நகராட்சி பகுதியில் குப்பைகளை முறையாக அள்ள வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, பொறியாளர் பாண்டு, பொதுப்பணி மேற்பார்வையாளர் வாசு, கவுன்சிலர் சரளா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story