ரூ.4¼ லட்சம் கையாடல்
மன்னார்குடியில் சுயஉதவிக்குழு பெண்களிடம் வசூல் செய்த ரூ.4¼ லட்சத்தை கையாடல் செய்த தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி;
மன்னார்குடியில் சுயஉதவிக்குழு பெண்களிடம் வசூல் செய்த ரூ.4¼ லட்சத்தை கையாடல் செய்த தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பணம் கையாடல்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜயராகவன்(வயது24). இவர் மன்னர்குடி மேலராஜ வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுயஉதவிகுழு கடன் பெற்வர்களிடம் பணம் வசூல் செய்யும் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு விஜயராகவன் சுய உதவிக் குழு பெண்களிடம் வசூல் செய்த பணத்தில் பாதியை நிறுவனத்தில் கட்டிவிட்டு மீதி பணத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நிதி நிறுவன நிர்வாகம் கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது சுய உதவிக்குழுவை சேர்ந்த 133 பெண்கள் கட்டிய கடன் தவணை பணத்தில் ரூ4 லட்சத்து 30ஆயிரத்தை கட்டாமல் விஜயராகவன் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
கைது
இது குறித்து தனியார் நிதி நிறுவன மேலாளர் ஒரத்தநாடு அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் (30) கடந்த டிசம்பர் மாதம் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மன்னார்குடி போலீசாருக்கு மாவட்ட சூப்பிரண்டு அலுவலத்திலிருந்து உத்திரவிடப்பட்டது. இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி விஜயராகவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story