சூளகிரி பகுதியில் பொதுமக்களிடம் கேபிமுனுசாமி எம்எல்ஏ குறைகள் கேட்பு
சூளகிரி பகுதியில் பொதுமக்களிடம் கேபிமுனுசாமி எம்எல்ஏ குறைகள் கேட்டார்.
சூளகிரி:
சூளகிரி அருகே உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி உள்ளிட்ட 3 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதில் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாதேஸ்வரன், கொம்மேபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், கவுன்சிலர்கள் வேலு, முனிராஜ், முன்னாள் கவுன்சிலர் சத்ய நாராயணா, கட்சி பிரமுகர்கள் ராஜப்பா, மகாதேவன், மஞ்சுநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
பின்னர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேசுகையில், சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட உத்தனப்பள்ளி, அளேசீபம் உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 4-வது சிப்காட் அமைக்க அரசு நிலம் கையகப்படுத்தி வரும் நிலையில், தங்களது விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்க அரசு முன்வரவேண்டும். தொழிற்சாலைகள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று பேசினார்.
Related Tags :
Next Story