ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் காவலர் பயிற்சி மைய தொடக்க விழா
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் காவலர் பயிற்சி மைய தொடக்க விழா நடந்தது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் (தன்னாட்சி) காவலர் பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் சக்திவேல் வரவேற்றார். கல்லூரி நிறுவனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களை இளங்கலை இயற்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள் சுதாகரன் மற்றும் வசந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஊத்தங்கரை துணை சூப்பிரண்டு அலெக்சாண்டர், இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காவலர் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தனர். மாணவர்கள் தங்கள் உடல் பலத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த காவலர் பயிற்சி மையத்தில் இணைந்து பயன்பெற வேண்டும். ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். கல்வி அறிவே ஒரு மனிதனுக்கு சிறப்பு தரும். நன்கு படித்து நல்ல வேலைவாய்ப்பை பெறுவதே பெற்றோருக்கு செய்யும் நன்றிக்கடன் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினர். இதில் அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு நன்றி கூறினார். விழாவை தமிழ்த்துறை பேராசிரியர் தெய்வம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை காவலர் பயற்சி மைய பயிற்சியாளர் கலைவாணன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story