காவேரிப்பட்டணத்தில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


காவேரிப்பட்டணத்தில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2022 11:07 PM IST (Updated: 14 March 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணத்தில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.

காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாரிகவுண்டன் சவுளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் கடத்த முயன்றது கண்டுபிடிப்பட்டது. இதையடு்த்து போலீசார் வருவதை பார்த்தவுடன் மணல் அள்ளியவர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story