கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் சங்க கால குட்டூர் செங்கல் காட்சிக்கு வைப்பு
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் சங்க காலத்தை சேர்ந்த குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் சங்க காலத்தை சேர்ந்த குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
குட்டூர் செங்கல்
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு அரிய வகை வரலாற்று பொருள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. அதன்படி இந்த மாதம் சங்க காலத்தை சேர்ந்த குட்டூர் செங்கல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் செங்கல்லை வளர்ச்சி அடைந்த நாகரிகத்தின் அடையாளமாக கருதுகின்றனர். சிந்து சமவெளி நாகரிகம், நகர நாகரிகம் என்பதற்கு அவர்கள் செங்கல் கட்டிடங்களில் வாழ்ந்ததும் ஒரு காரணமாகும். பானைகளை போலவே செங்கற்களும் ஒரு கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு அளவுள்ள செங்கல்லை பயன்படுத்தி உள்ளனர். சங்ககால மக்கள் ஒரு நகர நாகரிகத்தை கொண்டிருந்தனர் என்பதை எடுத்து சொல்வதாக இந்த செங்கற்கள் அமைந்துள்ளன. கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு போன்ற பல இடங்களில் சங்க கால செங்கற்கள் கிடைத்துள்ளன. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை சங்க கால தடையங்கள் இல்லாமல் இருந்து வந்தது.
ஆம்பள்ளி
இந்த நிலையில் அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வில் குட்டூர், அங்குசகிரி, கீழ்பையூர், ஐகுந்தம் போன்ற சில இடங்களில் சங்க கால செங்கற்களை கண்டறிந்துள்ளனர். இவற்றில் முழு செங்கற்களை கொண்டு கட்டிய கட்டிடம் ஆம்பள்ளியை அடுத்த குட்டூர் சிவன் திட்டு என்ற இடத்தில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால செங்கல் அங்கு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்கள் கண்டு களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story