நல்லம்பள்ளி அருகே பெண் குழந்தை திடீர் சாவு


நல்லம்பள்ளி அருகே  பெண் குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 14 March 2022 11:09 PM IST (Updated: 14 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே பெண் குழந்தை திடீரென இறந்தது.

நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி முனியம்மாள் (வயது25). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் யாசிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முனியம்மாளுக்கு கடந்த 36 நாட்களுக்கு முன்பு தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் டாக்டர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர், குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பிறந்து 36 நாட்களே ஆன நிலையில் பெண் குழந்தை இறந்தது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story