தர்மபுரி மாவட்டத்தில் உரிய சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட 25 வாகனங்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டத்தில் உரிய சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தகுதிச்சான்று, காப்பு சான்று ஆகியவை இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிய சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட லாரிகள், வேன்கள் உள்ளிட்ட 25 வாகனங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story