11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2022 11:09 PM IST (Updated: 14 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயிஸ் பெடரேஷன் வேலூர் கிளை சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆனந்தன், டோமினிக், விமல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணைச்செயலாளர் செந்தில், மண்டல செயலாளர் ரிச்சர்ட் ஸ்டேன்லி, துணைத்தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

கூட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திடவும், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை மின்சார வாரியமே தேர்வு செய்து நிரப்ப வேண்டும். மேட்டூர் பணிமனையின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்கள் குறைப்புக்கு அடித்தளமிடும் பணிகளை கணக்கீட்டு பிரிவில் புகுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
முடிவில் துணைத்தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Next Story