வாலிபர் உள்பட 2 பேர் கைது


வாலிபர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2022 11:10 PM IST (Updated: 14 March 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

முகநூல் தோழியுடன் பேசிய நண்பரை தாக்கிய வழக்கில் வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேந்தமங்கலம்:-
சேந்தமங்கலம் ஒன்றியம் கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). இவருக்கும், சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தன்னுடைய நண்பர் மணிகண்டனிடம் சுபாஷ் கூறியுள்ளார். அதன்பிறகு மணிகண்டன் முகநூல் பக்கத்தில் அந்த பெண்ணுடன் பேச தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக சுபாசுக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சுபாஷ், அவருடைய நண்பர்கள் மனோஜ்குமார், தினேஷ்குமார், வெங்கடேசன், விக்ரமாதித்தன் உள்ளிட்டவர்கள் மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பேளூக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், வெங்கடேசன், விக்ரமாதித்தன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதற்கிடையே ராசிபுரம் பகுதியில் பதுங்கி இருந்ததாக சுபாஷ் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story