சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத்தலைவர் ராஜினாமா


சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத்தலைவர் ராஜினாமா
x
தினத்தந்தி 14 March 2022 11:11 PM IST (Updated: 14 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத்தலைவர் ராஜினாமா

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 

இதையடுத்து நடந்த மறைமுக தேர்தலில் 12-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட மங்கலம் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தி.மு.க. சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 14-வது வார்டு உறுப்பினர் திலகவதி செல்வராஜன் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் மங்கலம் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபுவிடம் கடந்த 12-ந் ேததி அளித்தார். 

இந்த கடிதத்தை செயல் அலுவலர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

Next Story