சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தவன உற்சவம்


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தவன உற்சவம்
x
தினத்தந்தி 14 March 2022 11:14 PM IST (Updated: 14 March 2022 11:14 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தவன உற்சவம் நடந்தது.

சோளிங்கர்,

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் தவன உத்சவம் 3 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் உற்சவம் நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. சுவாமி கிளி கூண்டு வாகனத்தில் எழுந்தருளி ஊர் கோவிலில் இருந்து சென்று சிறிய மலை, பஞ்ச பாண்டவ தீர்த்த குளம் அருகே உள்ள நந்தவன மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கிளிமாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அகதைத் தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டது. பின்னர் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதைதொடர்ந்து மாலையில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் கிளி வாகனத்தில் எழுந்தருளி பஞ்சபாண்டவர் தீர்த்த குளத்தை ஒரு முறை வலம் வந்து ஊர் கோவிலுக்கு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story