‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்மாற்றி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா தேவூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தையும், அரசு மேல்நிலைப்பள்ளியையும் இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. குறிப்பாக மின்மாற்றியை தாங்கி பிடித்துள்ள இரும்பு கம்பிகள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தேவூர்.
போக்குவரத்து நெரிசல்
நாகையில் இருந்து கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வடக்கு பொய்கைநல்லூர் வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலை நாகை நேதாஜி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த மேம்பால கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ரெயில்வே மேம்பால பணி நிறைவு பெறாததால் மாற்று பாதையில் அதிகளவில் வாகனங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்தையன், நாகை.
Related Tags :
Next Story