மாற்றுத்திறனாளி தம்பதி, பெண் தர்ணா போராட்டம்


மாற்றுத்திறனாளி தம்பதி, பெண் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2022 11:41 PM IST (Updated: 14 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி மற்றும் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு விருத்தாசலம் அருகே பூதாமூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி விஜயகுமார்-லதா வந்தனர். பின்னர் அவர்கள் மனுக்கள் பதிவு செய்யும் இடத்திற்கு அருகில் வந்து தாங்கள் இது வரை அதிகாரிகளிடம் அளித்த மனுக்களை தரையில் போட்டு, தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது, தாங்கள் கட்டி வரும் வீடு பாதியில் நிற்கிறது. போதிய நிதி கிடைக்கவில்லை. இதற்கு உதவி செய்ய வேண்டும் என்று பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே வீடு கட்டி முடிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றனர்.

தர்ணா போராட்டம்

இதேபோல் பண்ருட்டி அருகே காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த குமரவேல் மனைவி சக்தி (வயது 42) என்பவரும் தங்களுடைய 1½ ஏக்கர் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருநபர் அபகரித்து விட்டார். இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ஏற்கனவே அளித்த மனுக்களை தரையில் போட்டு தர்ணா போராட்டம் நடத்தினார். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story