அரிச்சந்திரா நதியில் சிமெண்டு் பாலம் கட்டப்படுமா?
விக்கிரபாண்டியம் ஏரித்தெரு கிராமத்துக்கு அரிச்சந்திரா நதியில் சிமெண்டு் பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்;
விக்கிரபாண்டியம் ஏரித்தெரு கிராமத்துக்கு அரிச்சந்திரா நதியில் சிமெண்டு் பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில் தட்டி பாலம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள விக்கிரபாண்டியம் ஊராட்சியை சேர்ந்த காரியமங்கலம், ஏரித்தெரு ஆகிய பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி மக்கள் ரேஷன் கடை, கூட்டுறவு சங்கம், பள்ளிக்கூடம், கடைத்தெரு மற்றும் அத்தியாவசிய அனைத்து பணிகளுக்கும் விக்கிரபாண்டியத்துக்கு தான் வரவேண்டும். விக்கிரபாண்டியத்துக்கும் ஏரித்தெரு கிராமத்துக்கும் இடையே அரிச்சந்திரா நதி செல்கிறது. இந்த அரிச்சந்திரா நதியில் மூங்கில் தட்டி பாலம் அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
சிமெண்டு பாலம்
தற்போது இந்த மூங்கில்தட்டி பாலம் சேதமடைந்து உடைந்து கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றி வர வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பாதுமக்கள் நலன் கருதி அரிச்சந்திரா நதியின் குறுக்கே சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story