ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 March 2022 12:04 AM IST (Updated: 15 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

 கரூர், 
கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுஜன முன்னணி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் தாந்தோணிமலையில் நடந்தது. இதற்கு தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கலாராணி, மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ். வடிவேலன் மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார்.  கூட்டத்தில் வருகிற 28, 29-ந்தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் முழுமையாக கலந்து கொள்வது, அதற்காக பொதுமக்களையும், தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் 14 இடங்களில் அனைத்து சங்கம் சார்பில் வேலைநிறுத்தத்தை ஆதரித்து தெருமுனை பிரசாரங்கள் நடத்துவது.  வருகிற 28-ந்தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் 5 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story