சாலை விபத்தில் அரசு மருத்துவமனை காவலாளி பலி
கிருஷ்ணராயபுரம் அருகே சாலை விபத்தில் அரசு மருத்துவமனை காவலாளி பலியானார்
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி வளையல்காரன்புதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). இவர் கரூர் அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வளையல்காரன்புதூரை சேர்ந்த சக்திவேல் (42) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஆறுமுகம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சக்திவேல் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆறுமுகத்தின் மனைவி தங்கப்பா கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story