மீன்பிடிக்கும் ஏலத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு
மீன்பிடிக்கும் ஏலத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 148 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மீன்பிடிக்கும் ஏலம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுக்கா, செங்களூர் கிராம பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவித்திருப்பதாவது:- நாங்கள் செங்கண்ணி கண்மாயில் தண்ணீர் வற்றியபிறகு அதில் உள்ள மீன்களை பிடித்து அதனை செங்களூர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மீன்களை பங்கு வைத்து கொடுத்து விட்டு நாங்களும் பெற்று செல்வோம்.
இந்தநிலையில் செங்கண்ணி கண்மாயில் உள்ள மீன்களை ஏலம் விடுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி உதவி செயற்பொறியாளர், நீர்வளத்துறை பாசனபிரிவு ஏல அறிவிப்பை விடுத்துள்ளனர். ஆனால், அந்த ஏல அறிவிப்பில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படவில்லை. எனவே, அந்த ஏலத்தினை பரிசீலனை செய்து மறு ஏலம் விடவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கிக்கடன்
மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் மானியம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story