சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு தனி அலுவலகம்


சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு தனி அலுவலகம்
x
தினத்தந்தி 15 March 2022 12:46 AM IST (Updated: 15 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கைவிசாரிக்கும்சிறப்புபுலனாய்வுக்குழுவுக்குதிருச்சியில் தனி அலுவலகம்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

திருச்சி, மார்ச்.15-
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கைவிசாரிக்கும்சிறப்புபுலனாய்வுக்குழுவுக்குதிருச்சியில் தனி அலுவலகம்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி திருச்சி தில்லைநகர் வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு, 2012-ல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. எனவே, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றகோரி ராமஜெயம் மனைவி லதா 2014-ல் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார்.
பின்னர், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்குமாறு 2017-ல் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. சி.பி.ஐ.யாலும் குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் தமிழக போலீசாரிடமே ஒப்படைக்கக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான கே.என்.ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ராமஜெயம் கொலை வழக்கு குறித்த அடுத்தக்கட்ட விசாரணை நடத்த தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. துணை சூப்பிரண்டு ஆர்.ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அலுவலகம் அமைப்பு
அதைத்தொடர்ந்து ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தற்போது திருச்சியில் கடந்த 3 நாட்களாக நடத்தி வருகிறார்கள். அதற்காக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திலிருந்து, ராமஜெயம் வழக்கு குறித்த ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்டோர் திருச்சிக்கு வந்து, மாநகர கமிஷனர் கார்த்திகேயனிடம் ஆலோசனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் வீடு அமைந்துள்ள பகுதி, அவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோட்டை ஸ்டேஷன் சாலை, கொலை செய்யப்பட்டு கிடந்த திருவளர்ச்சோலை பகுதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு குறிப்பெடுத்தனர்.மேலும் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்துவதற்கு வசதியாக திருச்சி ேக.கே.நகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story