தேக்வாண்டோ போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம்


தேக்வாண்டோ போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம்
x
தினத்தந்தி 15 March 2022 12:50 AM IST (Updated: 15 March 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

தேக்வாண்டோ போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்

அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான 7-வது தேக்வாண்டோ போட்டியில் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு 10 தங்கப்பதக்கங்கள், 17 வெள்ளிப் பதக்கங்கள், 26 வெண்கலப் பதக்கங்கள் வென்று மொத்த தரவரிசையில் 127 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இதில், இரண்டாம் இடம் பிடித்த மாணவ-மாணவிகள், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதிதாசன், அடைக்கலம் ஆகியோர் பாராட்டப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு சார்பிலும் மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Next Story