வண்ணத்துப்பூச்சி தின விழிப்புணர்வு போட்டி

திருச்சி, மார்ச்.15-
தமிழ்நாடு வனத்துறை சார்பில் நேற்று வண்ணத்துப்பூச்சி தினவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, திருச்சி மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உலக வண்ணத்துப்பூச்சி தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் மேலூர் அய்யனார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 100 மாணவ-மாணவிகளுக்கு வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் விழிப்புணர்வை ஏற்படுத்தி போட்டிகள் நடத்தப்பட்டது. களிமண்ணில் ஆன மாதிரிகள், ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி-வினா ஆகிய போட்டிகள் மாவட்ட வன அலுவலர் கிரண் மேற்பார்வையில், உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார், வனச்சரகர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. போட்டி முடிவில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் முறையே முதல் 3 பரிசுகளும், இதுபோல 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Related Tags :
Next Story