தேங்காப்பட்டணம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை


தேங்காப்பட்டணம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2022 12:52 AM IST (Updated: 15 March 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கடை, 
தேங்காப்பட்டணம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
ராணுவ வீரர்
தேங்காப்பட்டணம் அருகே உள்ள கீழ்குளம் செந்தரை பகுதியை சேர்ந்தவர் துளசிதரன். இவருடைய மகன் அஜிமோன்(வயது 25). இவர், ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
அஜிமோனின் தந்தையும், தாயும் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதையடுத்து அஜிமோன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போது, செந்தரையில் உள்ள தனது பாட்டி செல்லாச்சியின்(70) வீட்டில் தங்குவது வழக்கம். 
தற்கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த அஜிமோன் வழக்கம்போல் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். பெற்றோர் இறந்ததாலும், திருமணம் ஆகாத ஏக்கத்திலும் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் செல்லாச்சி வெளியே சென்றிருந்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய செல்லாச்சி, பேரன் அஜிமோன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அஜிமோனை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜிமோன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சோகம்
பின்னர், இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆகாத ஏக்கத்தில் ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story