நித்திரவிளை அருகே ஆட்டோ மோதி முதியவர் சாவு


நித்திரவிளை அருகே ஆட்டோ மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 15 March 2022 12:58 AM IST (Updated: 15 March 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே ஆட்டோ மோதி முதியவர் சாவு பரிதாபமாக இறந்தார்.

கொல்லங்கோடு, 
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் சரல் பகுதியை சேர்ந்தவர் தாசைய்யன் (வயது 77). திருமணம் ஆகாத இவர், மாம்பழஞ்சி பகுதியில் உள்ள தம்பி மகளின் வீட்டில் வசித்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று காலை தாசைய்யன் விரிவிளை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது ஏலூர்முக்கு பகுதியில் வரும் போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் தாசையன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். 
ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே அந்த வழியாக வந்த காரில் அக்கம்பக்கத்தினர் ஏற்றி தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தாசைய்யன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி நித்திரவிளை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சுபாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story