கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 March 2022 1:00 AM IST (Updated: 15 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விழுப்புரம், 

செஞ்சி அருகே உள்ள நெகனூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் தாமோதரன் (வயது 37). இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக தாமோதரனை செஞ்சி போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் தாமோதரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தாமோதரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று செஞ்சி போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story