உலக அமைதி வேண்டி சிவன் கோவிலில் சங்காபிஷேகம்


உலக அமைதி வேண்டி சிவன் கோவிலில் சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 15 March 2022 1:01 AM IST (Updated: 15 March 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

உலக அமைதி வேண்டி சிவன் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மாசி கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் வலம்புரி சங்குகளை வரிசையாக அடுக்கி ஒவ்வொரு சங்கிலும் ஏலக்காய், பச்சை கற்பூரம் கலந்து காசி தீர்த்தம் ஊற்றப்பட்டு, ஒவ்வொரு சங்கிலும் பூ வைத்து அலங்கரிக்கப்பட்டது. தீர்த்தகலசம் வைத்து யாக குண்டம் வளர்த்து மகா கணபதி ஹோமம் செய்த பின்னர் ,ஒவ்வொரு சங்காக எடுத்துச்சென்று அதில் இருந்த தீர்த்தத்தை விஸ்வநாத சுவாமி மீது ஊற்றி மகா சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விஸ்வநாதர், பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஷோடச உபசாரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி இறைவனை வழிபட்டனர். மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சங்காபிஷேகத்தின்போது பக்தர்கள் உலக அமைதி வேண்டி வழிபாடுகள் மேற்கொண்டனர்.

Next Story