முன்னாள் வங்கி ஊழியர் பலி


முன்னாள் வங்கி ஊழியர்  பலி
x
தினத்தந்தி 15 March 2022 1:02 AM IST (Updated: 15 March 2022 1:02 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் வங்கி ஊழியர் பலியானார்

லால்குடி அருகே உள்ள வாளாடி பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (65). ஓய்வு பெற்ற மத்திய கூட்டுறவு வங்கி ஊழியரான இவரும், அதே பகுதியை சேர்ந்த நெல்வியாபாரி தனசாமி (60) என்பவரும் வாளாடி அருகே கபிரியேல்புரம் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சிமெண்டு லாரி அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கரலிங்கம் அதே இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தனசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கடலூர் விருத்தாசலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகன் (32) என்பவரை கைது செய்தார்.

Next Story