ரெயில் மோதி வாலிபர் சாவு


ரெயில் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 15 March 2022 1:03 AM IST (Updated: 15 March 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்தார்

திருமங்கலம். 
திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியை சேர்ந்த தனுஷ் கொடி மகன் ரமேஷ் (வயது 27). இவர் திருமங்கலம் தனியார் நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில்  ரமேஷ் திருமங்கலம் செல்ல சுங்கச்சாவடி பஸ் நிறுத்தத்திற்கு வரும்போது அங்கிருந்துரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மதுரையிலிருந்து நெல்லை நோக்கி சென்ற பயணிகள் ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மதுரை ரெயில்வே விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story