சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு


சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
x
தினத்தந்தி 15 March 2022 1:34 AM IST (Updated: 15 March 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

அழகர்கோவில், 
அழகர் மலை உச்சியில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது.  இக்கோவிலில் சஷ்டி மண்டப வளாகத்தில் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ. 30 லட்சத்து 99 ஆயிரத்து 700, தங்கம் 41 கிராம் காணிக்கையாக இருந்தது. உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் அனிதா, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் கலைவாணன், இந்து சமய அறநிலையத்துறை மேலூர் சரக ஆய்வர், கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவில் பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

Next Story