2 பேருக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அடுத்த அச்சம்பத்தில் இரு தரப்பினரிடையே ஜல்லிக்கட்டில் மாடு பிடித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அச்சம்பத்து மந்தை அருகே இதே ஊரை சேர்ந்த விஜயன் (வயது 33) மற்றும் 17 வயது சிறுவன் நின்றிருந்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த அச்சம்பத்து லாலா சத்திரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், முத்துக்கண்ணன், முத்துராஜா, சோமு, அருள், கவுன்சிலர் பாலு மற்றும் சிலர் அந்த இருவரையும் அரிவாளால் வெட்டி, இரும்பு ராடு, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story