குறைதீர்க்கும் கூட்டத்தில் 345 மனுக்கள் பெறப்பட்டன


குறைதீர்க்கும் கூட்டத்தில் 345 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 15 March 2022 1:41 AM IST (Updated: 15 March 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 345 மனுக்கள் பெறப்பட்டன.

தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 345 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாலைதவவளவன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story