வீட்டு வசதி திட்டங்களில் பயன் பெற பொய்யான வருமான சான்றிதழ்களை கொடுக்கிறார்கள்; சபாநாயகர் காகேரி வேதனை
வீட்டு வசதி திட்டங்களில் பயன் பெற பொய்யான வருமான சான்றிதழ்களை கொடுக்கிறார்கள் என்று சபாநாயகர் காகேரி வேதனையுடன் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பா.ஜனதா உறுப்பினர் சி.டி.ரவி கேட்ட கேள்விக்கு வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பதிலளிக்கையில் கூறியதாவது:-
வருமான உச்சவரம்பு
கர்நாடக அரசின் வீட்டு வசதி திட்டங்களில் பயன் பெற கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ.32 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்துகிறோம்.
அதே போல் நகரங்களில் வருமான உச்சவரம்பு ரூ.87 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
இவ்வாறு சோமண்ணா கூறினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காகேரி, நிறைய பொய்யான வருமான சான்றிதழ்களை வாங்கி கொடுக்கிறார்கள். அது தான் நடக்கிறது. பொய் ஆவணங்களை வைத்தே பயனாளர்களை தேர்வு செய்கிறார்கள்’’ என்றார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ்குமார் குறுக்கிட்டு பேசும்போது, ‘‘வீட்டு வசதி திட்டங்களில் வீடுகளை பெறுவதற்கான வருமான உச்சவரம்பை உயர்த்துவதாக கடந்த முறையும் விவாதிக்கப்பட்டது. இப்போதும் அரசு பரிசீலிப்பதாக சொல்கிறது. இவ்வாறு சொன்னால் எப்படி?’’ என்றார்.
2 ஆண்டுகள்
மீண்டும் பேசிய சபாநாகர் காகேரி, ‘‘பழைய வருமான உச்சவரம்பு முந்தைய அரசு நிர்ணயித்ததாக மந்திரி சொல்கிறார். இன்னும் அவ்வாறு சொன்னால் எப்படி. பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story