அதிராம்பட்டினத்தில் தர்பூசணி விற்பனை மும்முரம்
சுட்டெரிக்கும் வெயிலால் அதிராம்பட்டினத்தில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம்:
சுட்டெரிக்கும் வெயிலால் அதிராம்பட்டினத்தில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தர்பூசணி வரத்து அதிகரிப்பு
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் உடல் வெப்பத்தை தணிக்க பழ ஜூஸ், கரும்புச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி பருகி வருகின்றனர். இது தவிர நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகி்ன்றனர். இந்தநிலையில் அதிராம்பட்டினத்திற்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தர்பூசணிகளை அதிராம்பட்டினத்திற்கு கொண்டு வந்து விற்பனைக்காக வைத்துள்ளனர். இதனால் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
அதிக அளவில் கிடைப்பது மகிழ்ச்சி
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வெப்பத்தை தணிக்க தர்பூசணிகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம். மேலும் தர்பூசணி அதிக அளவில் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.
Related Tags :
Next Story