ஆசனூர் அருகே சாலையை கடந்து சென்ற யானைகள்


ஆசனூர் அருகே  சாலையை கடந்து சென்ற யானைகள்
x
தினத்தந்தி 15 March 2022 1:48 AM IST (Updated: 15 March 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே யானைகள் சாலையை கடந்து சென்றன

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் அவ்வப்போது குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் அருகே யானைகள் கூட்டமாக சாலையை கடந்து சென்றன. யானைகளை கண்டதும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை மெதுவாக ஓட்டி சென்றனர்.

Next Story