ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பயிற்சி முகாம்


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 March 2022 1:55 AM IST (Updated: 15 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா தலைமை தாங்கினார். வட்டார அலுவலர் சியாமளா வரவேற்றார். இதில், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தாக்க பயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார். புதுக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா பயிற்சி கையேடு வழங்கி பேசினார். அரிமளம் வட்டார அலுவலர் பவானி குழந்தை வளர்ச்சியும், குழந்தைகளின் வளர்ச்சியில் வளர் இளம் பெண்களின் பங்கு குறித்தும் பேசினார். முகாமில் நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story