மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது
அன்னவாசல்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அன்னவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமினை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், உடல் இயக்க மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு தொண்டை மற்றும் கண் மருத்துவர், மாவட்ட மாற்றுத்திறன் அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைககள் மற்றும் மாணவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு உபகரணங்கள், அடையாள அட்டை, பாதுகாப்பு பயணப்படி வழங்கவும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தனர். முகாமில், அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர்கள் அலெக்சாண்டர், கலா, பள்ளி தலைமையாசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரெகுநாததுரை, அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரோஸ்மேரி சகாயராணி ஆகியோர் தலைமையில் வட்டார வளமைய பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், உடல் இயக்க நிபுணர்கள் செய்திருந்தனர். முகாமில் அன்னவாசல் வட்டார வள மையத்திற்குட்பட்ட 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Related Tags :
Next Story